செய்திகள்

19வது திருத்தத்தை 20ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் சிக்கல்

தேர்தல் திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கட்சி பிரதிநிதிகளுக்கிடையான கலந்துரையாடலின் போது இணக்கப்பாடொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலின் போது 19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு இணங்கி சில விடயங்களை அரசாங்கம் நீக்க மேற்கொண்ட தீர்மானம் தொடர்பாக ஆராயபட்டு அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதனுடன் தேர்தல் திருத்தம் தொடர்பாகவும் ஆராயப்பட்டு அது தொடர்பாக அங்கிருந்த கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.

இதன்படி 19வது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்டும் போது 20வது திருத்ததமாக தேர்தல் திருத்தத்தையும் சமர்ப்பிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்றைய தினம் சபாநாயகர் தலைமையில் நடைபெறவுள்ள கட்சி தலைவர்களின் கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி 19வது திருத்தம் 20ம் திகதி பாராளு மன்றத்தில் சமர்ப்பிக்கப்படாது தேர்தல் திருத்;தம் தயாரிக்கப்படும் வரை ஒத்தி வைக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றன.