செய்திகள்

19வது திருத்த குழப்பம்: சபாநாயகர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களிடையே இன்று கலந்துரையாடல்

19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக சபாநாயகர் தலைமையில் அனைத்து கட்சி தலைவர்களின் கலந்துரையாடலொன்று இன்று நடைபெறவுள்ளது.இன்று காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

19வது திருத்தம் தொடர்பாக கட்சிகளுக்கிடையே பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையிலேயே இந்த கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

19வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் 20ம் திகதி சமர்ப்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ள போதும் அதனை உடனடியாக நிறைவேற்றாது. தேர்தல் திருத்தம் கொண்டுவரப்பட்ட பின்னர் இரண்டையும் ஒன்றாக நிறைவேற்ற வேண்டுமென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர்; தெரிவித்து வரும் நிலையில் இந்த விடயம் தொடர்பாகவே இன்றைய தினம் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.