செய்திகள்

19வது திருத்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்க திட்டம்

19 வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள விவாதத்தை ஒத்திவைக்குமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிய வருகின்றது.

தேர்தல் முறை திருத்;தத்துடனேயே 19வது திருத்தம் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் அந்த கட்சியினர் இருக்கும் நிலையிலேயே அவர்களால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் புதன்கிழமை பாராளுமன்றத்தில் 19வது திருத்தம் தொடர்பான விவாதம் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே அதனை ஒத்தி வைக்கமாறு கோருவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான கோரிக்கை கடிதத்தை கட்சி உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இன்று சபாநாயகரிடம் கையளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றுது.