செய்திகள்

19வது திருத்த விவாதம் இன்று நடைபெறாது

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நடத்த திட்டமிடப்பட்டிருந்த 19வது அரசியிலமைப்பபு திருத்தம் தொடர்பான விவாதம் நாளைய தினத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்றைய தினம் நடத்தப்பட்ட அனைத்து கட்சிகளின் கூட்டத்தின் போது விவாதத்தை ஒத்தி வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று காலை திட்டமிட்டப்படி பாராளுமன்றம் கூடவுள்ளபோதும் இது தொடர்பான விவாதம் நடத்தப்படாது.
நாளையும், நாளை மறுதினமுமே 19 தொடர்பான விவாதம் நடத்தப்படும்.