19க்கு மீண்டும் சிக்கல் , நிறைவேற்றப்படுவதில் சந்தேகம்: முடியாவிட்டால் பதவி விலக அரசாங்கம் தயார்
19வது அரசியலமைப்பு திருத்தத்தை எதிர்வரும் 27ம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதத்திற்கு உட்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள போதும் அதனை நிறைவேற்றுவதில் அரசாங்கம் மீண்டும் நெருக்கடி நிலைமையை எதிர் நேக்கியுள்ளதாக தெரிய வருகின்றது.
அரசாங்கத்தின் திருத்தத்தை முழுமையாக ஏற்றுக்கொள்ளாது எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அதில் சில திருத்தங்களை உள்ளடக்க தீரடமானித்துள்ள நிலையிலேயே அரசாங்கம் மீண்டும் அதனை நிறைவேற்றுவதில் நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளது.
அரசாங்கம் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் செயற்படாது முறையற்ற வகையில் திருத்;தங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு இடமளிக்கப்போவதில்லையெனவும் இதன்படி தாமும் திருத்தத்தை முன் வைப்போமெனவும் அதற்கு கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் அனுமதியை பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுத்துள்ளதாகவும் இதன்படி 19தொடர்பான விடயம் இன்னும் கலந்தரையாடல் மட்டத்திலேயே இருப்பதாகவும் நேற்று பாராளுமன்ற கட்டிடத் தெகுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய எதிரணி எம்.பிக்களான தினேஷ் குணவர்தன , ஜீ.எல்.பீரிஸ் , டலஸ் அழகப்பெரும , வாசுதேவ நாணயக்கார மற்றும் பந்துல குணவர்தன அகியோர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் 19க்கு ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள போதும் அந்த கட்சியில் சிலர் அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறக் கூடுமென தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் 19ஐ நிறைவேற்ற முடியுமா என்ற சந்தேகம் நிலவுகின்றது. இந்நிலையில் 19ஐ நிறைவே;ற முடியாது போனால் அரசாங்கம் உடனடியாக பதவி விலகுமென அரசாங்க தரப்பினர் அண்மைக்காலமாக தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.




