செய்திகள்

19 ஆதரிக்காதவர்களுக்கு பொதுத் தேர்தலில் தமது கட்சியில் போட்டியிட இடமில்லை: ஜனாதிபதி, பிரதமர் தீர்மானம்

19வது அரசியிலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதும் அதனை நிறைவேற்றுவதற்காக வாக்களிக்காதவர்களை எதிர்வரும் பொதுத் தேர்தலின் போது வேட்பாளர் பட்டியலில் இடமளிக்காது ஒதுக்கி வைப்பதற்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன தீர்மானித்துள்ளன.
19வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரின் நிலைப்பாட்டின் அடிப்படையிலேயே அந்த இரண்டு கட்சிகளும் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.
இருப்பினும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் சிலர் 19வது திருத்தத்திற்கு எதிராக வாக்களிப்பதனை நோக்கமாக கொண்டிருப்பதாக தெரிய வருகின்றது. இவ்வாறான நோக்கங்களை தடுக்கும் வகையிலேயே இந்த தீர்மாhனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.