செய்திகள்

19 ஆவது திருத்தச் சட்டம்: உயர் நீதிமன்ற வியாக்கியானம் நாளை கிடைக்கும்

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் வியாக்கியானம், நாளை புதன்கிழமை தனக்கு கிடைக்குமென சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, தெரிவித்தார்.

நேற்று நடைபெற்ற கட்சித் தலைவர்களின் கூட்டத்தின் போதே சபாநாயகர் இது தொடர்பில் அறிவித்தார். 19 திருத்தம் தொடர்பான விவாதத்தை எப்போது நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

அங்கு தொடர்ந்து கருத்துரைத்த சபாநாயகர், ‘உயர்நீதிமன்றத்தில் வியாக்கியானம் கிடைத்த சில மணித்தியாலங்களுக்குள், கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை கூட்டி, சட்டமூலம் தொடர்பான விவாதத்தை அன்றைய தினமோ (புதன்கிழமை) அல்லது அதற்கடுத்த நாளான வியாழக்கிழமையோ நடத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும்’ என்றார்.