செய்திகள்

19 ஆவது திருத்தத்தில் பல குறைபாடுகள்: மகிந்த ராஜபக்‌ஷ

பாராளுமன்றில் முன் வைக்கப்பட்டுள்ள 19வது அரசியல் அமைப்பு சீர் திருத்தத்தில் குறைபாடுகள் இருப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாரஹேன்பிட்டியில் விவசாய சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு நிறைவடைந்த நிலையில், அவர் வெளியேறிய போது, ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இந்த தகவலை தெரிவித்தார்.

திருத்த சட்டத்தை நான் இதுவரை வாசிக்கவில்லை. கேள்விப்பட்டதன் படி அதில் பல குறைப்பாடுகள் காணப்படுகின்றன. இதில் காணப்படும் பல விடயங்கள் குறித்து திருப்தி கொள்ள முடியாது என குறிப்பிட்டார்.