செய்திகள்

19 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிக்கும்

19வது திருத்தச்சட்டத்துக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவாக வாக்களிக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.

19வது திருத்தம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

19வது திருத்தச்சட்டத்த சட்டம் எந்த இனத்துக்கு நன்மை என்பதை விட இந்த நாட்டுக்கு மிக முக்கியமானதாக உள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

கடந்த கால ஆட்சியில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை பயன்படுத்தி சிறுபான்மை இனத்தினை நசுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் அமைக்கப்படும் சுயாதீன ஆணைக்குழுக்கள் தலையீடுகள் இன்றி சுயமாக செயற்படக்கூடிய நிலையும் ஏற்படும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.