செய்திகள்

19 ஆவது திருத்தத்தை ஆராய்ந்த பின்னரே தீர்மானம்! மஹிந்த கூட்டத்தில் முடிவு

பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19 ஆவது திருத்தச் சட்டமூலத்தை மேலும் ஆராய்ந்த பின்னரே அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதா? இல்லையா? என தீர்மானிப்பதென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நடத்தப்பட்ட சந்திப்பில் ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித் துள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் 19 ஆம் திகதி பேராசிரியர் ஜீ.எல். பீரிஸின் தலைமையில் கொழும்பில் கூடி இது குறித்து இறுதி முடிவு எடுக்க இருப்பதாக ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா குறிப்பிட்டார்.

19 ஆவது திருத்தத்துடன் தொடர்புள்ள புதிய திருத்தங்கள் பற்றி அநேக ஐ.ம.சு.மு. பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு போதிய தெளிவு இல்லாததால் அது குறித்து ஆராய வேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.