செய்திகள்

19 ஆவது திருத்தம் பற்றி முடிவெடுக்க அமைச்சரவை இன்று அவசர கூட்டம்

19 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் முடிவு எடுக்க வேண்டும் என்ற நெருக்கடியான நிலைக்குள் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஜனாதிபதி தலைமையில்அமைச்சரவை கூடுகின்றது. இன்று பிற்பகல் 2.00 மணிக்கு அமைச்சரவை கூடவுள்ளது.

கடந்த வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் 19 ஆவது திருத்தச் சட்டம் உடன் நிறைவேற்றப்பட வேண்டும் என முக்கிய அமைச்சர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் முடிவு காணப்படாமல் கூட்டம் முடிந்திருந்தது. இதையடுத்து நடந்த தேசிய நிறைவேற்று சபையின் கூட்டத்திலும் 19 ஆவது திருத்தம் தொடர்பில் முடிவு எட்டப்படவில்லை.

இந்த சமயத்தில் ஏப்ரல் 23 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என ஐ.தே.க உறுதியாக இருக்கிறது. நாடாளுமன்றம் கலைக்கப்படாமல் தேசிய அரசாங்கத்தை அமைக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முயற்சிக்கிறது. இதற்காக பல தனியான சந்திப்புக்களில் சுதந்திரக் கட்சி ஈடுபட்டு வருகின்றது. இதனால் இன்றைய அமைச்சரவைக் கூட்டம் முக்கியத்துவமுடையதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.