செய்திகள்

19 ஆவது திருத்த சட்டம் தேர்தலில் வெல்ல முடியாத ஒருவரின் ‘அரசியலமைப்பு சதி’: சம்பிக்க

தேர்தலில் வெல்லமுடியாத ஒருவர் அதிகாரத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான ஒரு ‘அரசியலமைப்பு சதியே’ பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் 19 ஆவது அரசியலமைப்பு சட்ட திருத்தம் என்று ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்திருக்கிறார்.

ஜனாதிபதியின் எதேச்சை அதிகாரத்தை இல்லாமல் செய்யவே கடந்த தேர்தலில் மக்கள் வாக்களித்தனரே தவிர பராளுமன்றத்தையோ அன்றி பிரதமரையோ நிறைவேற்று அதிகாரத்தை விட மேலாண்மை பெற செய்வதற்கு அல்ல என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

அரசாங்கத்தின் தலைவராக பிரதமரை ஆக்குவதற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.