செய்திகள்

19 ஆவது திருத்த விவாதம் 20 வரை ஒத்தி வைக்கப்படலாம்?

19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விவாதத்தை இன்றைய தினம் நடத்துவதா ஒத்திவைப்பதா என்பது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் கூடி ஆராய்ந்து முடிவெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இன்று பாராளுமன்றத்தில் கட்சி தலைவர்களிடையே விசேட கூட்டமொன்று நடத்தப்படவுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி 19இல் திருத்தங்கள் சிலவற்றை முன்வைக்க வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருப்பதுடன் விவாதத்தை ஒத்தி வைக்க வேண்டுமென்றும் கூறி வருகின்றது. இதன்படி இன்றைய தினம் விவாதம் நடத்தப்படாது அது ஒத்தி வைக்கப்கடலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி எதிர்வரும் 20ம் திகதி வரை இந்த விவாதம் ஒத்தி வைக்கப்படலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.