செய்திகள்

19 தொடர்பாக ஆராய ஸ்ரீ.ல.சு.க மீண்டும் இன்று கூடவுள்ளது

19வது திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதானிகளிடையே இன்று கொழும்பில் சந்திப்பொன்று நடத்தப்படவுள்ளது.
குறித்த திருத்தத்தில் கட்சிக்கு இணங்க முடியாத திருத்தங்கள் தொடர்பாக இங்கு கலந்துரையாடி தீர்மானமொன்று எடுக்கப்ப்வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்று அல்லது நாளை 19வது திருத்;தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அனைத்து கட்சிகளின் கூட்டமொன்றும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.