செய்திகள்

19 தொடர்பாக ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும்! – ஜே.வி.பி கோரிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 19வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக தனது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு அறிவிக்க வேண்டுமென ஜே.வி.பி தலைவர் அனுர குமார திஸாநாயக்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று ஜே.வி.பி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

“19வது திருத்தம் தொடர்பாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் வெளியிடும் கருத்துக்கள் அதனை நிறைவேற்றுவதனை தடுக்கும் சூழ்ச்சிகள் போன்றே காணப்படுகின்றது. இந்த கருத்துகளுக்கும் தனக்கும் தொடர்பில்லையென ஜனாதிபதி ஒதுங்கியிருக்க முடியாது இந்த விடயம் தொடர்பாக அவர் தனது நிலைப்பாட்டை நாட்டுக்கு அறிவிக்க வேண்டும்”. என அனுர குமார தெரிவித்துள்ளார்.