செய்திகள்

19 மற்றும் 20 ஆவது திருத்தங்களை ஒரேதினத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி இணக்கம்

19ஆவது திருத்தத்தையும் 20 ஆவது திருத்தத்தையும் ஒரேதினத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அறிய வருகிறது.

தேர்தல் மறுசீரமைப்பு குறித்து ஆராய நால்வரடங்கிய குழுவொன்றை ஜனாதிபதி கடந்த வாரம் நியமித்திருந்தார்.

இந்த குழு 20 ஆவது திருத்தமாக தேர்தல் மறுசீரமைப்பு சட்டமூலமொன்றை கொண்டுவருவது குறித்து ஆராய்ந்து வருகிறது. இதன் அறிக்கை நாளை அல்லது நாளை மறு தினங்களில் ஜனாதிபதியிடமும் கையளிக்கப்படவுள்ளது.

இதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரி அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்படுகிறது