செய்திகள்

19 மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்ட நேரத்தில் மாற்றம்

கொழும்பு , கம்பஹா , களுத்துறை , புத்தளம் , கண்டி , யாழ்ப்பாணம் மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரையில் தொடரும் என்பதுடன் மற்றைய 19 மாவட்டங்களிலும் எதிர்வரும் 16ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு பின்னர் அன்றைய தினம் பிற்பகல் 4 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
குறித்த 19 மாவட்டங்களிலும் எதிர்வரும் 14ஆம் திகதி காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டத்தை தளர்த்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் பின்னர் அந்த திகதியில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. -(3)