செய்திகள்

19 மாவட்டங்களில் நாளை 8 மணித்தியாலங்களுக்கு ஊரடங்கு தளர்த்தப்படும்

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் அதிகமாக உள்ள கொழும்பு , கம்பஹா , களுத்துறை , புத்தளம் , கண்டி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்கள் தவிர்ந்த மற்றைய 19 மாவட்டங்களிலும் நாளை திங்கட்கிழமை காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது.
குறித்த மாவட்டங்களில் காலை 6 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு பின்னர் பிற்பகல் 2 மணி முதல் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை வைரஸ் தொற்று அச்சுறுத்தல் அதிகமாக உள்ள குறித்த 6 மாவட்டங்களிலும் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்குசட்டடம் தொடருமென அறிவிக்கப்பட்டுள்ளது. -(3)