செய்திகள்

19 மூலம் எவ்வாறு ஜனாதிபதியின் அதிகாரங்கள்; குறைந்துள்ளது : ஜயம்பதி விக்கிரமரட்ண விளக்கம்

19வது அரசியலமைப்பு திருத்தத்தினூடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதென குறித்த திருத்தத்தை தயாரிக்க பங்களிப்ப செய்த ஜனாதிபதி ஆலோசகர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண தெளிவு ஊடகங்களுக்கு தெளிவு படுத்தியுள்ளார்.
இதன்படி ஜனாதிபதியின் அதிகாரங்கள் எவ்வாறு குறைக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான தகவல்கள் வருமாறு.
* 19வது திருத்தத்தின்படி பாராளுமன்றம் மற்றும் ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
* ஜனாதிபதியொருவர்  2 தடவைக்கு மேல் பதவி வகிக்க முடியாது.
* ஜனாதிபதியால் பாராளுமன்றத்தை நான்கரை வருடங்களின் பின்னரே கலைக்க முடியும் அப்படி  அதற்கு முன் கலைப்பதென்றால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு அங்கிகாரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
* ஜனாதிபதிக்கு எதிராக இனி உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை வழக்கு தாக்கல் செய்யலாம்.
* பிரதமர் தெரிவு விடயத்தில் பாராளுமன்றத்தில் அதிக நம்பிக்கையுள்ளவரை பிரதமராக நியமிக்கலாம். ஆனால் ஜனாதிபதியால் அவரை பதவி விலக்க முடியாது பிரதமராக பதவி விலக வேண்டும்; அல்லது நம்பிக்கையில்ல பிரேரணை மூலம் சாதாரன பெரும்பான்மை வாக்குகளால் பதவி விலக்க முடியும் அல்லது அரசாங்கத்தின் வரவு செலவு உள்ளிட்ட திட்டங்கள் தோற்கும் போது அமைச்சரவை கலைக்கப்பட்டு பிரதமர் பதவி விலகுவார்
* அமைச்சர்கள் நியமனத்தின் போது ஜனாதிபதி பிரதமரின் ஆலோசனையை பெற்றுக்கொள்ள வேண்டும்.