செய்திகள்

19 வது திருத்தத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரம் நீக்கப்படவில்லை: மஹிந்த குற்றச்சாட்டு

19வது திருத்தம் சாதகமானதொரு அறிகுறியாக இருந்த போதும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிப்பதாக மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி இதன் மூலம் நிறைவேற்றப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இரண்டு தடவைக்கு மேல் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை இல்லாதொழித்தல், ஜனாதிபதி வேட்பாளரின் ஆகக் குறைந்த வயது எல்லையை 32 லிருந்து 35 ஆக அதிகரித்துள்ளமை போன்றவையே இந்த திருத்தத்தில் இடம்பெற்றுள்ளன எனக் குறிப்பிட்ட அவர், வயதெல்லையை 35ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளமை என்ன காரணத்திற்காக என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஒன்றுகூடல் நிகழ்வொன்று கொழும்பு நாரஹேன்பிட்டி அபயராமயில் நடைபெற்ற போது அந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அன்று ஜே. ஆர். ஜனாதிபதி வேட்பாளரான வயதெல்லையை 32 ஆக குறிப்பிட்டமை ரணில் விக்கிரமசிங்க போட்டியிடுவதற்கு வாய்ப்பாகவே என குறிப்பிட்ட அவர்: இப்போது ரணில் விக்கிரமசிங்க யாருக்காக வயதெல்லையை அதிகரித்துள்ளார் என்றும் கேள்வியெழுப்பினார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுபுக்கூற வேண்டும் என்ற திருத்தம் சாதகமான அறிகுறி என குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ச, சுயாதீன ஆணைக்கழு பாராளுமனத்திற்குப் பொறுப்புக்கூற வேண்டும் என்பதும் சிறந்ததெனக் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாவற்றையும் விடவும் நிதிக் குற்றவியல் பிரிவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் பயங்கமானது. ஊடகங்கள் இந்த வர்த்தமானி அறிவித்தல் குறித்து இதனை விடவும் தேடிப்பார்த்து தகவல்களை வெளியிட்டிருக்க வேண்டும் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.