செய்திகள்

19 வது திருத்தத்துக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு: மத்திய குழு தீர்மானம்!

அரசியலமைப்புக்கான 19 வது திருத்தத்துக்கு ஆதரவளிப்பதென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது. கொழும்பில் இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கட்சி மத்திய குழுவின் விஷேட கூட்டத்திலேயே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

19 வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பின்னர், தேர்தல் சீர்திருத்தங்களைச் செய்வதற்கான 20 வது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்த பின்னரே இதற்கான தீர்மானம் கட்சியின் மத்திய குழுவால் எடுக்கப்பட்டது.