செய்திகள்

19 வது திருத்தம்: 20, 21 ஆம் திகதிகளில் விவாதம்

19 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான விவாதத்தை எதிர்வரும் 20, 21 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு கட்சி தலைவர்கள் கூட்டத்தில் நேற்று இணக்கம் காணப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நேற்று பிற்பகல் கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்தப்பட்டபோதே இந்த தீர்மானம் அனைத்து தலைவர்களாலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இதற்கமைய மேற்படி இரு தினங்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணிவரையில் 19 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் தொடர்பிலான விவாதம் நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் பாராளுமன்றம் கலைக்கப்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று அறிவித்திருந்தமை தெரிந்ததே.