செய்திகள்

19 வது திருத்தம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

அரசியலமைப்புக்காக 19 வது திருத்தம் எதிர்வரும் 27 ஆம் திகதியே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று இதனை சமர்ப்பிப்பதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், பாராளுமன்றத்தில் இன்று காணப்பட்ட குழப்பங்களையடுத்து சபையை ஒத்திவைத்த சபாநாயகர் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை நடத்தினார்.

கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் 19 ஆவது திருத்தத்தை 27 ஆம் திகதி சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினமும் மறுநசாளும் அது குறித்த விவாதம் இடம்பெறும்.