செய்திகள்

1992 திரும்புமா?

ஆட்டத்தின் போக்கை அணிக்கு சாதகமாக மாற்றக்கூடிய வீரர்கள் பாக்கிஸ்தான் அணியில் இல்லை என இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் ராகுல்திராவிட் கருத்துதெரிவித்துள்ளார்.
2015 உலககிண்ண போட்டிகளில் விளையாடும் பாக்கிஸ்தான் அணியை கடந்த காலங்களில் விளையாடிய அணிகளுடன் ஒப்பிட்டால் பிரசித்தமான வீரர்களோ அல்லது ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடிய வீரர்கள் இல்லை என்றே தோன்றுகின்றது.
1992 இல்இதேபோன்று இளமையான அணியே விளையாடியது,அவ்வேளை அவர்கள் ஆரம்ப போட்டிகளில் தடுமாறினர்,ஆனால் பின்னர் பாக்கிஸ்தானின் கிரிக்கெட் வரலாற்றில் என்றென்றும் நினைவுகூறப்படுபவர்களாக மாறினர்.
அதனை இம்முறையும் செய்வார்கள் என்பதே பாக்கிஸ்தானின் நம்பிக்கையாக இருக்ககூடும்.
அணித்தலைவர் என்ற வகையில் மிஸ்பா உல் கக்கினை அனைவரும் மதிக்கின்றனர்.அவர் அணிக்கு வழங்கும் ஸ்திரத்தன்மைக்காக அனைவரும் அவரை மதிக்கின்றனர்.அணி உள்ள சூழ்நிலையில் எதனை சிறப்பாக செய்யமுடியுமுமோ அதனை அவர் செய்வார்,ஆகவே அவரை பிழைசொல்ல முடியாது தன்னால் முடிந்ததை செய்யமுயல்கின்றார்.
அப்ரீடி துடுப்பபெடுத்தாட செல்லும்போது அவரது தலையை சுற்றி சிகப்புவட்டம் சுழல்கிறது என கருதுகிறேன்,அதனால் தான் அவர் எல்லதவற்றிற்கும் மட்டை சுழற்றுகின்றார்
ஆனால் வெறுமாதிரி நிதானமாக விளையாடுவதை நான் பார்த்திருக்கிறேன்,ஆனால் சமீபகாலமாக அவர் அவ்வாறு விளையாடுவதில்லை. ஏன குறிப்பிட்டுள்ளார்