செய்திகள்

2 இலட்சம் ரூபா பிணையில் ஜெயக்குமாரி விடுதலை: கடவுச் சீட்டும் முடக்கம்

கடந்த சுமார் ஒரு வருட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஜெயக்குமாரி இன்று கலை விடுதலை செய்யப்பட்டார். இன்று காலை கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட அவர், இரண்டு லட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவரது கடவுச் சீட்டும் முடக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு மாதத்துக்கு ஒரு தடவை பொலிஸ் நிலையம் ஒன்றில் கையொப்பமிடவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

362 நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருந்த அவர் மீது எந்தவிதமான குற்றப் பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டிருக்கவில்லை.

Jeyakumari 2 Jeyakumari 3