செய்திகள்

20ஆம் திகதிக்கு பின் 2 வாரங்களுக்கு பொது போக்குவரத்து சேவைகள் அத்தியாவசிய சேவையாளர்களுக்கு மட்டும்

எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பணிகளுக்காக திறக்கப்படுமாக இருந்தால் பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்தும் முறை தொடர்பாக யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் போக்குவரத்து அமைச்சில் அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற போக்குவரத்து துறைசார் அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே இந்த யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதன்படி இரண்டு வாரங்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்காக மாத்திரம் பொது போக்குவரத்தை நடத்துவது தொடர்பாக யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
வேறு தேவைகளுக்காக செல்பவர்களை அதில் அனுமதிக்காதிருக்கவும் பஸ்கள் , ரயில்களுக்குள் சமூக இடைவெளி உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு முறைகளை பின்பற்றவும் நடவடிக்கையெடுப்பது குறித்து யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. -(3)