செய்திகள்

20க்கு இடையூறு ஏற்படுத்துவோர் மக்கள் துரோகிகள் : ஜனாதிபதி

20வது அரசியலமைப்பு திருத்தத்திறற்கான அனுமதியை இன்று இரவு நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் பெற்றுக்கொள்வுள்ளதகவும் இதன்படி அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்தினுடையது எனவும் 20க்கு இடையூறு ஏற்படுத்துபவர்கள் துரோகிகள் எனவும்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று மாலை கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடைபெற்ற 20வது திருத்தம் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இன்று 6 மணிக்கு கூடவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் 20க்கான அனுமதியை பெற்றுவிடுவோம். ஆனால் அதனை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு பாராளுமன்றத்தினுடையது. இந்நிலையில் இதற்கு இடையூறுகளை ஏற்படுத்துபவர்கள் மக்கள் துரோகிகளாகவே கருதப்படுவர். என அவர் தெரிவித்துள்ளார்.