செய்திகள்

20க்கு பின்னரே 19 முழுமைப் பெறும் : சம்பிக்க ரணவக்க

20வது திருத்தத்தை நிறைவேற்றி தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்ளப்படும் வரை நேற்று நிறைவேற்றப்பட்ட 19வது அரசியலமைப்பு திருத்தம் முழுமையடையாதென ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தினூடாக ஜனாதிபதி எனும் பறவையின் சிறகுகளை வெட்ட சிலர் முயற்சித்தனர். அதேவேளை மேலும் சிலர் தலையை வெட்ட முயற்சித்தனர் ஆனால் இறுதியில் ஒர இறகு மாத்திரமே புடுங்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும் 19வது திருத்தம் 20வது திருத்தம் வந்த பின்னரே முழுமையாக செயற்படுத்தப்படும் இதனால் 20வது திருத்தத்தை கூடிய சீக்கிரத்தில் நிறைவேற்ற நடவடிக்கையெடுக்க வேண்டும். என அவர் தெரிவித்துள்ளார்.