செய்திகள்

20ம் திகதிக்கு பின் பஸில் இலங்கை வருவார்?

அமெரிக்காவில் தங்கியிருக்கம் முன்னாள்; பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு வருவார் என அவரின் சட்டத்தரணி கடுவலை நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பஸில் ராஜபக்ஷவுக்கு எதிரான நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக நிதி மோசடி விசாரணை பிரிவினரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது அவர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி யூ.அர்.டி சில்வா நீதிமன்றத்தில் இதனை தெரிவித்துள்ளார்.
பஸில் ராஜபக்ஷ நாட்டுக்கு வந்தவுடன் அவரை கைது செய்து நிதி மோசடி விசாரனை பிரிவில் ஆஜர் படுத்துமாறு நீதிமன்றத்தினால் ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் அவரை கைது செய்யாது சட்டத்தரணியூடாக அங்கு ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு அவர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்திடம் கோரிய போதும் அதனை நீதிமன்றம் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.