செய்திகள்

20ம் திகதி இரவு பாராளுமன்றத்திற்குள் மதுபானம் பயன்படுத்தப்பட்டதா? விசாரணை நடத்த அரசாங்கம் திட்டம்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு மஹிந்த அழைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிரக்கட்சி உறுப்பினர்கள் பாராளுமன்ற சபைக் கூடத்துக்ககுள் தொடர்ச்சியாக மேற்n காண்ட போராட்டத்தின் பொது கடந்த 20ம் திகதி இரவு உள்ளேயே தங்கிருந்த எம்.பிக்கள் அங்கு மது பானம் பருகினார்களா என்பது தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்றைய தினம் இரவு அங்கு தங்கியிருந்த எம்.பிக்கள் வெளியிலிருந்து மதுபானம் கொண்டுவந்து உள்ளே பருகியுள்ளதாகவும் அவர்களுக்கு பாராளுமன்ற உணவகத்தினூடாக பைட்ஸ் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக அரசாங்கத்தின் சிரேஸ்ட அமைச்சரொருவர் ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இதன்படி இந்த விடயம் தொடரபாக விசாரணை நடத்தி அது தொடர்பாக சபாநாயகருக்கு அறிவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்த அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.