செய்திகள்

20ற்கும் மேற்பட்ட ஶ்ரீ.ல.சு.க உறுப்பினர்கள் ஐ.தே.கவுடன் இணைய தீர்மானம்

தற்போதைய அரசியல் நிலைமையில் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 20ற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்  ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அமைச்சர் பீ.ஹரிஷன் தெரிவித்துள்ளார்.

இன்று அனுராதபுரத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஏற்கனவே ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளர் நாவின்ன ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக்கொண்டுள்ளதுடன் எம்.கே.டீ.எம்.குணவர்தன , அருந்திக பெர்ணான்டோ, சாந்த பண்டார ஆகியோர் ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துக்கொள்வர் என இன்று கண்டியில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.