செய்திகள்

20ற்கு எதிராக நீதிமன்றம் செல்வோம்: ஹக்கீம்

தற்போது முன் வைக்கப்பட்டுள்ள யோசனையுடன் 20வது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கபடுமாகவிருந்தால் அதற்கு எதிராக நீதிமன்றத்துக்கு செல்வோம் என ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளாரர்.
நேற்று மாத்தளை நகரில் நடைபெற்ற கூட்டமொன்றிலேயே இதனை தெரிவித்துள்ளார்.
சிறுபான்மை கட்சியினருக்கு பாதிப்பான வகையிலேயே தற்போதைய 20வது திருத்தத்தில் உள்ளடக்கியுள்ள யோசனைகள் காணப்படுகின்றது. இந்நிலையில் எமது யோசனைகள் இன்றி பாராளுமன்றத்துக்கு அது வருமாகவிருந்தால் அதனை நாம் எதிர்ப்போம். அத்துடன் அதற்கு எதிராக நீதிமன்றத்துக்கும் செல்வோம். என அவர் தெரிவித்துள்ளார்.