செய்திகள்

20வது திருத்தத்தை சபையில் சமர்ப்பித்ததும் ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைப்பார் : விஜேதாச ராஜபக்‌ஷ

20வது அரசியலமைப்பு திருத்தமான தேர்தல் திருத்த சட்ட மூலத்தை  பாராளுமன்றத்தில் சமர்ப்பித்ததும் பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதாக நீதி அமைச்சர் விஜேதாஷ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக  பாராளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த பாராளுமன்றத்தில் 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு நடவடிக்கையெடுக்கப்படவுள்ளதாகுவும் அவர் தெரிவித்துள்ளார்.
100 நாள் வேலைத் திட்டம் முடிவடைந்துள்ள நிலையில் தொடர்ந்தும் இந்த பாராளுமன்றத்தை நடத்தி செல்வது அர்த்தமற்றது எனவும் இதனால் அதனை கலைத்து புதிய பாராளுமன்றத்தை அமைப்பதே சிறந்தது என அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கள் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.