செய்திகள்

20வது திருத்தம் சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கலையும் : ஜனாதிபதி

20வது திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பட்ட பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நேற்று இரவு அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் சமுக பிரதிநிதிகளுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதியின் பிரகாரம் தேர்தல் திருத்தத்தை நிறைவேற்ற நாம் நடவடிக்கையெடுப்போம். அதன்படி 20வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். அதன்பின்னர் அதனை நிறைவேற்ற விடாது இடையூறுகளை விளைவிப்பவர்களுக்கு மக்கள் பாடத்தை புகட்டுவர். எவ்வாறாயினும் அது நிறைவேற்றப்பட்டாலம் சரி இல்லாவிட்டாலும் சரி  பாராளுமன்றம் கலைக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.