செய்திகள்

20வது திருத்தம் சிறிய கட்சிகளுக்கு பாதிப்பாகவே அமைந்துள்ளது : பொன்சேகா

20வது அரசியலமைப்பு திருத்தத்தை தான் எதிர்ப்பதாக ஜனநாயக கட்சியின் தலைவரும் முன்னாள் இராணுவ தளபதியுமான பீல்ட் மார்ஷல்  சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
குறித்த திருத்தம் சிறிய கட்சிகளுக்கு பாதிப்பான வகையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதான கட்சிகள் இரண்டுக்கு ஏற்றால் போன்றே அது காணப்படுகின்றது. இதற்கு நாம் எதிர்ப்பபை வெளியிடுகின்றோம். பிரதான கட்சிகளே மாறி மாறி ஆட்சியமைக்கும் வகையில் திருத்தத்தை அமைத்துக்கொண்டால் சிறிய கட்சிகள் என்ன செய்வது. என அவர் தெரிவித்துள்ளார்.
கெக்கிராவ பகுதியில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.