செய்திகள்

20வது திருத்தம் தொடர்பான நிலைப்பாட்டை ஐ.தே.க பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் : எதிர்க் கட்சி தலைவர் கோரிக்கை

தேர்தல் திருத்தம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதனை அந்த கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக வெளியிடவேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் திருத்தத்தை அங்கிகரித்து பாராளுமன்றத்தில் அதனை நிறைவேற்றி புதிய முறையில் தேர்தலை நடத்த நடவடிக்கையெடுக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
20வது தொடர்பாக ஒவ்வொரு கருத்துக்களை கூறிக்கொண்டிருக்காது உண்மையான நிலைப்பாடு என்ன என்பதனை அவர்கள் அறிவிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நிமல் சிறிபால டி சில்வாவினால் விடுக்கப்பட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.