செய்திகள்

20வது திருத்தம் நிறைவேறும் வரை பாராளுமன்றம் கலையாது : அமைச்சரவை பேச்சாளர்

20வது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேற்றப்படும் வரைபாராளுமன்றம் கலைக்கப்படாது என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய சந்திப்பின் போது 20வது திருத்தத்தை நிறைவேற்றிய பின்னரே பாராளுமனறத்தை கலைப்பதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில்  20வது திருத்தத்தை காட்டி காலத்தை இழுத்தடிகாது உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்க வேண்டுமென்று அரசாங்கத்தின் பிரதான கட்சியான ஐக்கிய தேசிய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது இந்நிலையில் இதற்கு முரனான வகையிலேயே அமைச்சரவை பேச்சாளரான ராஜித சேனரட்னவின் கருத்து அமைந்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.