செய்திகள்

20வது திருத்த வர்த்தமானி அறிவித்தலை வாபஸ்பெற வேண்டும் : சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் தீர்மானம்

தேர்தல் திருத்தமான 20வது அரசியலமைப்பு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
நேற்று கொழும்பில் கூடிய அந்த கட்சிகள் இது தொடர்பாக தீர்மானங்களை மேற்கொண்டு அந்த தீர்மானங்களை அரசாங்கத்துக்கும் மற்றும் ஜனாதிபதிக்கும் அறிவிக்க தீர்மானித்துள்ளன. தேர்தல் திருத்தத்தில் சிறுபான்மை கட்சியினர் தொடர்பான விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காது அவர்களால் முன்வைக்கப்பட்ட யேசனைகளை உள்ளடக்காது தேர்தல் திருத்தம் தொடர்பான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதனால் அந்த வர்தமனி அறிவித்தலை வாபஸ் பெறுமாறு வலியுறுத்தவும் மற்றும் தமது யோசனைகளை அதில் உள்ளடக்குமாறு வலியுறுத்த நாடு பூராகவும் ஆர்ப்பாட்டங்களை நடத்தவும் அவர்கள் தீர்மானித்துள்ளனர்.
கொழும்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அலுவலகத்தில் நேற்று இரவு நடைபெற்ற இந்த கூட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் , ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் ஜே.வி.பி உள்ளிட்ட 13 சிறிய கட்சி பிரதிநிதிகள் கலந்துக்கொண்டுள்ளனர்.