செய்திகள்

20வது தொடர்பாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையே விசேட கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையே முக்கிய கலந்துரையாடலொன்று எதிர்வரும் நாட்களில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி எதிர்வரும் 8 அல்லது 9ம் திகதி குறித்த கலந்துரையாடல் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
20வது திருத்தத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பதற்கு நடவடிக்கையெடுப்பது தொடர்பாக கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடுகளை ஏற்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடலின் போது தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.