செய்திகள்

20வது தொடர்பாக நாளைய தினம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் : அமைச்சரவை பேச்சாளர்

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக நாளைய தினம் இறுதி முடிவுக்கு வரலாம் என எதிர்பார்ப்பதாகவும் அதன் பின்னர் அதனை வர்த்தமானி அறிவித்தலினூடாக வெளியிட முடியுமெனவும் அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
இன்று அரசாங்க தகவல்திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தயாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாளை விசேட அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. அதன்போது 20வது திருத்தம் தொடர்பாக இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடு ஏற்படுத்தப்படவுள்ளது. அமைச்சரவையில் இறுதி தீர்மானம் மேற்கொண்டு அதனை வர்த்தமானியில் வெளியிட முடியுமென எதிர்பார்க்கின்றோம்.