செய்திகள்

20வது தொடர்பாக 16ம் திகதி விசேட கட்சித் தலைவர்களின் கூட்டம்

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக எதிர்வரும் 16ம் திகதி விசேட கட்சித் தலைவர்களின் கூட்டமொன்று நடைபெறவுள்ளது. சபாநாயகர் சமல் ராஜபக்‌ஷ தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கூட்டத்தின் போது 20வது அரசியலமப்பு திருத்தம் தொடர்பாக விவாதத்தை ஆரம்பிக்க வேண்டிய தினம் என்பன தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய தினம் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட 20வது திருத்தம் வர்த்தமானியூடாக வெளியிடப்பட்ட பின்னர் அது தொடர்பாக உயர் நீதிமனற்த்தின் வியாக்கியானத்தை பெற்று பின்னர் பாராளுமன்ற ஒழுங்கு பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டு அதன்பின்னரே விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள முடியும் இந்நிலையில் இந்ந விடயம் தொடர்பாக கட்சிகளின் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் 16ம் திகதி குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.