20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகிய கார் (படங்கள்)
கண்டியிலிருந்து அட்டன் நோக்கி சென்ற சிறிய ரக கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டன் மல்லியப்பு பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் பயணித்த எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து 04.05.2015 அன்று நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சாரதியின் தூக்கக் கலக்கம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.