செய்திகள்

20 அடுத்த வாரம் சமர்ப்பிப்பு: பிரதமர் ரணில் அறிவிப்பு

20வது அரசியலமைப்பு திருத்தத்தை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பிரதமர் இதனை ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிற்குத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று கோட்டேயிலுள்ள ஸ்ரீகொத்த கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளதுடன் மேற்படி அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதர வளித்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஐ.தே.க. செயற்குழு தீர்மா னித்துள்ளது.