செய்திகள்

20 ஆவது திருத்தச்சட்டம் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது அல்ல: ரட்ண தேரர்

20 ஆவது திருத்தச்சட்டம் சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது அல்ல என்று தெரிவித்த ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற குழுத்தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் ஐக்கிய தேசியக்கட்சிக்கு தேர்தல்முறைமை மாற்றம் தொடர்பான 20 ஆவது திருத்தச்சட்டமூலத்தை அமுலாக்குவதில் ஈடுபாடு இல்லை. அதனால் தான் குறித்த திருத்தச்சட்டமூலத்தை சட்டமாக்குவதில் தாமதம் ஏற்படுகிறது  எனவும் தெரிவித்தார்.

20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பாக கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஹெல உறுமய கட்சி என்ற அடிப்படையில் நாம் மற்றைய கட்சிகளுக்கு பிரச்சினையை ஏற்படுத்த மாட்டோம். சிறுபான்மை மக்களுக்கு இந்த சட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் வழமையான வாக்கை அரசியல் வாதிகளுக்கு வழங்க முடியும் இதில்  எவ்வித மாற்றமும் ஏற்படாது. இப்படியான பிரசாரங்கள் மக்களை குழப்பும்  ஓர் நடவடிக்கையாகும். சிறுபான்மையின கட்சிகளுக்கு 20ஆவது திருத்தச்சட்டத்திருத்தம் பிரச்சினையை ஏற்படுத்துமாக இருந்தால் அதனை சிறுபான்மையின கட்சிகள் தெளிவுபடுத்தவேண்டும் என தெரிவித்தார்.