செய்திகள்

20 ஆவது திருத்த யோசனைகள்: அமைச்சரவை 13இல் ஆராய்வு

புதிய தேர்தல் முறைக்கு வழிவகுக்கும் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த யோசனைகள் தொடர்பாக அமைச்சரவை எதிர்வரும் 13 ஆம் திகதியன்று கூடி ஆராயவுள்ளது.

சட்டவரைஞர் திணைக்களத்தால் தற்போது தொகுக்கப்படும் இச்சட்டவரைபை அமைச்சரவை கடந்த புதனன்று ஆராய்ந்தது. இதனைச் சமர்ப்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கவனமாக இவற்றை ஆராயுமாறும், அடுத்த கூட்டத்துக்கு முன்னர் அரசியற் கட்சிகளுடன் இணக்கப்பாட்டுக்கு வருமாறும் ஆலோசனை தெரிவித்திருந்தார்.

255 பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றி இந்த திருத்தத்தில் பிரேரிக்க ப்பட்டுள்ளது தொகுதியின் விகிதாசார முறைகள் ஆகிய கலப்பு முறையில் 196 எம். பிக்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். சிறுபான்மை அரசியற் கட்சிகளுக்கும் இந்த முறைகளூடாக எம்.பிக்களைப் பெற வழி வகுக்கப்பட்டுள்ளது. மீதியான 59 பேர் தேசியப் பட்டியல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான தமக்கு யோசனைகள் கிடைத்து வருவதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். சாமான்ய மக்களும், தொழிற்சங்கவாதிகளும் யோசனைகளைத் தெரிவித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.