செய்திகள்

20 ஆவது திருத்த விவகாரம்! நாளை ஜனாதிபதி கட்சிகளை சந்திப்பார்: இணக்கப்பாடு இல்லாவிட்டால் பாராளுமன்றம் கலையும்

புதிய தேர்தல் திருத்தம் தொடர்பாக நாளை 11ம் திகதி பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை கொண்டுள்ள சகல அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.

இதன்போது தேர்தல் திருத்தம் தொடர்பாக கட்சிகளுக்கிடையே இணக்கப்பாடொன்றை ஏற்படுத்தி 13ம் திகதி அமைச்சரவையில் புதிய தேர்தல் திருத்த விடயத்தை சமர்ப்பித்து அதனை நிறைவேற்றிக் கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் கட்சிகளுக்கிடையே பொது இணக்கப்பாடு ஏற்படாவிட்டால் உடனடியாக பாராளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி எண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் நேற்று மாலை ஜே.வி.பி கட்சி பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்குமிடையே நடைபெற்ற சந்திப்பின் போது தேர்தல் திருத்தத்திற்கு பொது இணக்கப்பாட்டை எட்ட முடியாது போகுமாகவிருந்தால் பாராளுமன்றத்தை கலைக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.