செய்திகள்

20 தமிழர்கள் படுகொலை: முற்றுகையிட முயன்ற வைகோ கைது (படங்கள்)

திருப்பதி அருகே ஆந்திர வனத்துறையினரால் 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டித்து சித்துார் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற வைகோ உள்ளிட்ட 1000க்கும் மேற்பட்டோர் வேலுாரில் கைது செய்யப்பட்டனர்.

ஆந்திர மாநிலம் திருப்பதியை அடுத்த வனப்பகுதியில் செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றதாகக் கூறி தமிழர்கள் 20 பேரை ஆந்திர மாநில சிறப்புக் காவல்படையினர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.

இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக அரசியல்தலைவர்கள் ஆந்திர வனத்துறையினரின் இந்த செயலை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனிடையே 20 தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக சித்துார் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட மதிமுக அறிவிப்பு செய்தது.

அதன்படி இன்று காலை வேலுாரில் இருந்து மதிமுகவினர் மற்றும் பல்வேறு தமிழர் நல அமைப்புகளைச் சேர்ந்த 1000க்கும் மேற்பட்டோர் சித்துார் புறப்பட்டனர்.

ஆனால் அவர்களை வழியில் மறித்து வேலுார் மாவட்ட காவல்துறை கைது செய்தது. கைது செய்தவர் களை வேனில் ஏற்றமுயன்றபோது காவல்துறையினருக்கும் வைகோ தரப்பினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.

13377_631292340348789_8598019891960619319_n

1464761_631292570348766_3062174563540087427_n

vaiko vellore arrest 600 2