செய்திகள்

20 தொடர்பாக ஆராய அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது

20வது திருத்தம் தொடர்பாக ஆராய்வதற்கென அமைச்சரவை இன்று அவசரமாக கூடவுள்ளது.
இன்று முற்பகல் ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ளதாவும் இதன்போது 20வது திருத்தம் தொடர்பாக தீர்மானமொன்று மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் நாளைய தினம் பாராளுமன்றத்தில் அதனை சமர்ப்பிக்கவே முயற்சிகள் இடம்பெறவதுடன் அதன்பின்னர் பாராளுமன்றத்தை கலைப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை 20வது திருத்தத்திற்கு கட்சிகளுக்கிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியுமா எனவும் இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது