செய்திகள்

20 தொடர்பாக நாளை சபை ஒத்தி வைப்பு பிரேணையை கொண்டு வர அரசாங்கம் தீர்மானம்

20வது அரசியல் திருத்தம் தொடர்பாக நாளை சபை ஒத்திவைப்பு  வேளை பிரேணையை கொண்டு வருவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இன்று காலை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இந்த தீர்மானத்துக்கு  ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 20வது திருத்தத்தை நிறைவேற்ற விடாது செய்வதற்கான சூழ்ச்சியே எனவும் இதற்கு இடமளிக்க மாட்டோம் எளவும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எவ்வாறாயினும் நாளை அந்த பிரேரணையை கொண்டு வருவதற்கே அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.