செய்திகள்

20 தொடர்பாக வெள்ளிக்கிழமைக்குள் நிலைப்பாட்டை அறிவியுங்கள் : ஐ.மசு.கூ கட்சிகளுக்கு ஜனாதிபதி கோரிக்கை

20வது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பாக தங்களின் நிலைப்பாடுகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு முன்னர் அறிவிக்குமாறு  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய மக்கள் முன்னணியின் கட்சிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.
நேற்று ஜனாதிபதி செயலாகத்தில் நடைபெற்ற  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கட்சித் தலைவர்களின் கூட்டத்திலேயே  ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இங்கு அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட 20வது அரசியலமைப்ப திருத்தம் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்நிலையில் இது ஐக்கிய தேசிய கட்சி கொண்டு வந்த தீர்மானமாக இருப்பினும் இதில் திருத்தங்களை மேற்கொள்ள முடியுமென ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தியதுடன் இது தொடர்பான தங்களின் யோசனைகளை எதிர்வரும் வெள்ளிக் கிழமைக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.